தாகத்தைத் தீருமையா அபி
பல்லவி
தாகத்தைத் தீருமையா – அபி
ஷேகத்தைத் தாருமையா – எங்கள்
1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது
இரங்கிடும் இப்போதே எம்மில் – எங்கள்
2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத
எத்தனையோ இடர் வந்ததையோ,
அத்தனே உமது அருள் பலத்தாலே
நித்தமும் ஜெயம் கொள்வோம் – நாங்கள் – எங்கள்
3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல
போதகராம் ஆவியானவரே,
பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே
பரிசுத்த மாவோமே – நாங்கள் – எங்கள்
4. சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம்
சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே
மெத்தவும் பலன் காண்போம் – நாங்கள் – எங்கள்