தூதர் வாழும் நதி தீரம் – Thoothar Vaalum Nathi Theeram

Deal Score0
Deal Score0

தூதர் வாழும் நதி தீரம் – Thoothar Vaalum Nathi Theeram

1.தூதர் வாழும் நதி தீரம்
நாமும் சென்று சேர்வோமா?
தேவ ஆசனம் சமீபம்
சேர்ந்து கீதங்கள் பாடுவோமா?

சேர்வோம் ஜீவநதி தீரம்,
மனோகரமாம் ஜீவநதி தீரம்,
தேவனின் சிங்காசனம் சமீபம்
வானோரோடும் பாடிடுவோம்.

2.சோபை வீசும் நதி தீரம்
இன்பமாய் உலாவுவோம்,
நித்ய பொற்பகலில் பாக்யம்
பெற்று யேசுவை ஆராதிப்போம்.

3.நதி தீரம் சேருமுன்னே
பாரம் யாவும் தள்ளுவோம்;
ஆன்ம சுத்தியும் அடைந்தே
அங்கி, கிரீடமும் சம்பாதிப்போம்.

4.பளிங்கு நதியின் மீது
மீட்பர் முகம் காணுவோம்;
சாவை வென்ற நண்பரோடும்
மீட்பின் கீதங்கள் பாடிடுவோம்.

5.வேகம் சேர்வோம் நதி தீரம்,
வேகம் யாத்திரை தீருமே;
வேகம் பாடுவோம் சங்கீதம்,
சுத்தர் சேனையோடென்றென்றுமே.

Thoothar Vaalum Nathi Theeram song lyrics in English

1.Thoothar Vaalum Nathi Theeram
Naamum Sentru Searvoma
Deva Aasanam Sameebam
Searnthu Geethangal Paaduvoma

Searvom Jeeva Nathi Theeram
Manokaramaam Jeeva Nathi Theeram
Devanin Singasanam Sameebam
Vaanorodum Paadiduvom.

2.Sobai Veesum Nathi Theeram
Inbamaai Ulaavuvom
Nithya Porpagalil Bakyam
Pettru Yesuvai Aarathippom

3.Nathi Theerum Searumunnae
Paaram Yaavum Thalluvom
Aanma Suththiyum Adainthae
Angi Kireedamum Smabathippom

4.Palingu Nathiyin Meethu
Meetpar Mugam Kaanuvom
Saavai Ventra Nanbarodum
Meetpin Geethangal Paadiduvom

5.Veagam Searvom Nathi Theeram
Veagm Yaathirai Theerumae
Veagam Paaduvom Sangeetham
Suththar Seanaiyodentrumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo