தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

Deal Score0
Deal Score0

பல்லவி

தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி
சுத்தரான தேவனைத் துதிப்போமே.

சரணங்கள்

1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும்,
நீசரைத் தேவ புத்திரராக்கவும்,
நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர்

2. நீடிக தயை யுடன் நீசரை
நித்தம் பரிபாலிக்கும் நேசரை
நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர்

3. அடியார் பிழை பொறுத்தன்புடன்
ஆதரித்தாரே மிக இன்புடன்;
அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர்

4. அந்தமும் ஆதியு மின்றியே,
அன்பு பரிசுத்தம் நீதியொன்றியே,
அத்தன் உலகோரை நித்தமும் காக்கிறார். – தூயர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo