தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae
தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
1. கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
2. ஈசோப்புலால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையால்
3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்
5. துபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்துவிட்டோம்