தேவன் வருவார் தேவன் வருவார்
தேவன் வருவார் தேவன் வருவார்
இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார்
1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார்
தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார்
துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார்
தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார் – தேவன்
2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே
தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே
கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும்
விண் தூதர் போலவே பண்பாடலாம் – தேவன்
3. ஜீவன் தந்த இயேசுவை நீ ஏற்றுக் கொள்வாயோ
ஜீவன் மாற்றமதை நாடி வாராயோ?
கல்வாரி நாயகன் கதவோரம் நிற்கிறார்
கல்லுள்ளம் திறந்திட ஆயத்தமா – தேவன்