தேவ அன்பை அறிவித்திட – Deva Anbai Ariviththida
தேவ அன்பை அறிவித்திட – Deva Anbai Ariviththida
Lyrics:
தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை
செய்த நன்மை விவரித்திட அளவும் இல்லை
வேதனையின் நேரங்களில்
தேற்றிய உம் திருக்கரங்கள்
சிலுவையில் காயங்கள் ஏற்றிடுதே
சிந்தப்பட்ட அவர் இரத்தம்
பாவங்களை கழுவிடுமே
பரிசுத்த திருச் சமூகம்
நித்தம் வழி நடத்திடுமே
பெலனாக உடன் வருவார்
பரிசுத்த வாழ்வை தந்திடுவார்
சொந்தங்கள் மறந்தாலும்
கர்த்தர் நம்மை மறப்பதில்லை
நம்பினோர் பிரிந்தாலும்
அவர் கை விடுவதில்லை
உள்ளங்கைகளில் வரைந்திடுவார்
சேதம் இன்றி தினம் நம்மை நடத்திடுவார்