தோத்திரம் செய்வோமே இரட்சகனை
பல்லவி
தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத்
தோத்திரம் செய்வோமே (3)
அனுபல்லவி
இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம்
எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம்
சரணங்கள்
1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய்
கனிந்திடச் செய்தவரை
கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை
கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம்
2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த
இன்பங்கள் நல்கிடவே
இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்
இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி – தோத்திரம்