தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு

Deal Score0
Deal Score0

பல்லவி

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே

சரணங்கள்

1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத்

2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத்

3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

5. நாளைத்தினம் ஊண் உடைக்காய் என் சிந்தனைகளைக்
கவலையற்ற தாக்கினதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை
சீக்கிரமாய் காண்பதினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo