நண்பா வாலிப நண்பா – Nanba Valiba Nanba
நண்பா வாலிப நண்பா – Nanba Valiba Nanba
நண்பா வாலிப நண்பா
என் நண்பா அன்புள்ள நண்பா – 2
உன் வாழ்வு வசந்தமாக வாலிப பிராயத்திலே
சிருஷ்டிக் கர்த்தரை நினைத்திடு – 2
1. வாலிபமும் இளமையுமே மாயைதானே நண்பா
சிருஷ்டிகர் உன் நினைவானால் அழியாது உன் வாலிபம் – 2
அவர் உந்தன் எல்லாமே ஆனால்
பாவம் மேற்கொள்ளாதே -( 2)
2. வாலிபத்தில் தேவனை நினைத்த யோசேப்பு உயர்த்தப்பட்டான்
தானியேலும் தேவனை நினைத்தான்
வாழ்வில் உயர்த்தப்பட்டான்
நீ உந்தன் தேவனை நினைத்தால்
உயர்துவார் உன் தேவன் – (2)