நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane
நன்றி நிறைந்த இதயத்துடனே
நாளெல்லாம் பாடிடுவேன்
நல்லவரே நீர் செய்த நன்மைகள்
நினைத்து துதித்திடுவேன்
1.நிர்மூலமாகாமல் காத்தீரையா
குடும்பமாய் எங்களை மீட்டீரையா
நானும் என் வீட்டாரும்
உம்மையே என்றும் சேவிப்போம்
2.இதுவரை என்னை நீர் நடத்திவர
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
கண்ணோக்கிப் பார்த்தீரையா
கை தூக்கி எடுத்தீரையா
3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்
உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன்
மனதின் கண்களையே
திறந்தீர் உம்மைக் காண