நான் பயப்படவே மாட்டேன் – Naan Bayapadave mattean

Deal Score+1
Deal Score+1

நான் பயப்படவே மாட்டேன் – Naan Bayapadave mattean

பல்லவி

நான் பயப்படவே மாட்டேன்
என் தேவன் என்னோடு
நான் கலங்கிடவே மாட்டேன்
என் கர்த்தர் என்னோடு

அனுபல்லவி

பாடுவேன் பாடுவேன் பாடிடுவேன்
உம்மை துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்

சரணங்கள்

1. மரணம் வருவதாயிருந்தாலும் பயப்படவே மாட்டேன்
துன்பம் தொல்லைகள் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதனை ஜெயித்திடுவேன்
சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன் – நான்

2. அக்கினி ஊடாய் நடந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆபத்து இடையில் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
என் இயேசு எப்போதும் என்னோடு இருக்கின்றார்
என்னை அவர் தம் கரத்தால் தாங்கியே அணைத்திடுவார் – நான்

3. தீமை என்னை தொடர்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
சோதனை என்னை சூழ்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
வாக்குரைத்த வல்லவர் என்னோடு வருகின்றார்
வருகையில் அவரோடு நானும் பறந்திடுவென் – நான்

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
But now thus saith the LORD that created thee, O Jacob, and he that formed thee, O Israel, Fear not: for I have redeemed thee, I have called thee by thy name; thou art mine.
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
When thou passest through the waters, I will be with thee; and through the rivers, they shall not overflow thee: when thou walkest through the fire, thou shalt not be burned; neither shall the flame kindle upon thee.
நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.
For I am the LORD thy God, the Holy One of Israel, thy Saviour: I gave Egypt for thy ransom, Ethiopia and Seba for thee.
நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.
Since thou wast precious in my sight, thou hast been honourable, and I have loved thee: therefore will I give men for thee, and people for thy life.
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
Fear not: for I am with thee: I will bring thy seed from the east, and gather thee from the west; ஏசாயா 43 : Isaiah :

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo