நாம் தேவ சந்நிதானத்தில் – Naam Deva Sannithaanaththil Lyrics
நாம் தேவ சந்நிதானத்தில் – Naam Deva Sannithaanaththil Lyrics
1.நாம் தேவ சந்நிதானத்தில்
மகா மகிழ்ச்சியாக
வந்தாதி கர்த்தரண்டையில்
வணக்கஞ் செய்வோமாக,
யெகோவாவுக்கு நிகர் ஆர்!
யாவும் நன்றாகச் செய்கிறார்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
2.கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால்
யாவற்றையும் நன்றாக
சிஷ்டித்துத் திட்டம் செய்ததால்,
மகா வணக்கமாக
விண் மண் கடல் ஆகாசமும்
விடாமல் துதி செலுத்தும்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
3.மேலான அற்புதங்களை
செய்தென்னைப் பூரிப்பாக்கி,
என் மேல் விழுந்த பாரத்தை
இரக்கமாய் விலக்கி
ரட்சித்த மா தயாபரர்
துதிக்கு என்றும் பாத்திரர்;
காத்தாவுக்கே புகழ்ச்சி!
4.மெய் மார்க்கத்தாரே, கர்த்தரை
துதித்துக் கொண்டிருங்கள்;
அவர் சிறந்த நாமத்தை
எந்நேரமும் தொழுங்கள்
அவர் எல்லாம் படைத்தவர்,
கர்த்தாதி கர்த்தரானவர்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
Naam Deva Sannithaanaththil Lyrics in English
1.Naam Deva Sannithaanaththil
Mahaa Magilchiyaaga
Vanthaathi Karththarandaiyil
Vanakkam Seivomaga
Yehovukku Nigar Aar
Yaavum Nantraaga Seikiraar
Karthavukkae Pugalchi
2.Karthathi Karththar Gnanaththaal
Yaavattriyum Nantraaga
Sistithu Thittam Seithathaal
Mahaa Vanakkamaaga
Vin man Kadal Aakasamum
Vidaamal Thuthi Sellum
Karthavukkae Pugalchi
3.Mealana Arputhangalai
Seithennai poorippaakki
En Mael Viluntha Paaraththai
Irakkamaai Vilakki
Ratchitha Maa Thayaaparar
Thuthikku Entrum Paathirar
Karthavukkae Pugalchi
4.Mei Maarkkaththarae Kartharai
Thuthithu Kondirungal
Avar Sirantha Naamaththai
Ennearamum Tholungal
Avar Ellaam Padaiththavar
Karththathi Kartharaanavar
Karthavukkae Pugalchi