நிம்மதி இல்லா நேரம் – Nimathi illa Neram
நிம்மதி இல்லா நேரம் – Nimathi illa Neram
நிம்மதி இல்லா நேரம், நான் உம்மை துதிப்பேன், எனக்கு
சோதனை பெருகும் போதும், நான் உம்மை துதிப்பேன் -(2)
நங்கூரமே, கேடகமே, என் வாழ்வின் மறைவிடமே,
உம்மை தானே எந்நாளும் நம்புவேன்,
என்னைக் காக்கும் வல்ல தேவனே, இஸ்ரவேலின் ராஜாவே
நீர் தானே என் வாழ்வின் தஞ்சமே, இயேசப்பா,
நீர் தானே என் வாழ்வின் தஞ்சமே …(நிம்மதி)
1) இதுவரை என்னை நடத்தி வந்த தெய்வம் நீர் அல்லோ, என்னை
இனி மேலும் நடத்திப் போகும் ராஜா நீர் அல்லோ -(2)
உம்மைத் தானே நம்புவேன், உம்மைத் தானே நேசிப்பேன்,
உம்மை நம்பி ஓடுவேன், எந்நாளுமே -(2)
ஆ, ஆ, ஆ,
கடும் புயல் வந்தாலும், நான் அசைக்கபட மாட்டேன்,
எனைக் கண்டு கொண்ட தேவனை நான் அறிவேன், -(2)
எனக்காய், யாவும் செய்த தேவனை நான் நம்புவேன்
ஆ, ஆ, ஆ, ஆ ……..(நங்கூரமே)
2) உம் கரங்களுக்குள் என்னை நீர் வரைந்து வைத்தீரே,
உம் சிறகினாலே என்னை நீர் மூடி உள்ளிரே -(2)
நீர் தானே இயேசப்பா, என் வாழ்வின் இரட்சகர்,
நீர் மட்டும் போதுமே, எந்நாளுமே -(2)
ஆ, ஆ, ஆ
என் பாதம் இடறாமல், என்னை தாங்கி நடத்துகிறீர்,
என் வாழ்நாள் எல்லாம் உம்மையே நான் நம்புவேன் -(2)
என்னை கண்மணிபோல் காக்கும் உம்மை நம்புவேன்.
ஆ, ஆ, ஆ, ஆ ……..(நங்கூரமே)