நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

Deal Score+5
Deal Score+5

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

நீரே நிரந்தர உறவே
இயேசுவே இயேசுவே
மாறா மகிமையும் உமக்கே
இயேசுவே….

உமதன்பை நானும் நினைத்திருப்பேன்
உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன்
உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன்
மறவேன்…. உம்மையே…- நீரே நிரந்தர

1.நோயில் படுத்த போதும்
தேடி அணைத்தீர் தேவன் நீரே
உம்மை மறந்த போதும்
என்னை நீரோ மறந்ததில்லை
இதுவரை நானும் அறிந்திட்டத்தில்
உமதன்பு தானே அதிசயமே
நேசமான தேவன் நீரே தானே
ஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர

2.வாதை தொடர்ந்த போதும்
தேவை அறிந்து தேற்றினீரே
கண்ணீர் வடிந்த நேரம்
அன்னையாகி அணைத்து கொண்டீர்
எதுவந்த போதும் பயமில்லையே
உமதன்பு தானே பரவசமே
பாரம் நீங்க தோளில் தாங்குவீரே
பாசப் பார்வையாலே தேற்றுவீரே-நீரே நிரந்தர

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo