பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா
பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா
அனுபல்லவி
பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று
1. வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து
அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை – பந்தி
2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து
சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே – பந்தி
3. கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார்
கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார் – பந்தி
4. நானுன்னை கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே
என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன் – பந்தி
5. மெய்யாகவே மெய்யாகவே உங்களிலொருவன்
என்னைக் காட்டி கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் – பந்தி
6. பன்னிரு சீடர்களும் நானோ நானோ வென்றார்
காட்டிக்கொடுக்கும் யூதாசும் நானோ ரபி என்றான் – பந்தி