பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா

Deal Score0
Deal Score0

பல்லவி

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா

சரணங்கள்

1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் – பரி

2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க – பரி

3. கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும் – பரி

4. பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும் – பரி

5. இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு
வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே – பரி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo