பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai song lyrics
1. பரிசுத்த வேதமே
விலை பெற்ற செல்வமே
ஜென்மம் எனக்குக் கூறி
என்னை எனக்குப் போதி
2. அலையு மென்னைக் கூட்டி
இரட்சக ரன்பு காட்டி
பாதையி லெனை யோட்டி
பண்பாய் எச்சரிப்பாயே
3. ஆபத்தினி லாறவும்
ஆவியால் நான் தேறவும்
சாவில் ஜெயங் கொள்ளவும்
சத்திய வழிகாட்டி நீ
4. பின் வரும் சந்தோஷமும்
வன் பாவியின் நாசமும்
சொல்லுந் தேவ வேதமே
செல்வமே நீ எனதே