பார் பார் பார் இயேசுவின் ஜீவன்
பல்லவி
பார் பார் பார் இயேசுவின் ஜீவன் போகுது பார்
சரணங்கள்
1. கண்விழி வீழ்ந்திட கைகளயர்ந்திட கால்கரம் சாய்ந்துவிழ
விண்ணொளி மங்கி ஆவி பிரிந்து திருமேனி குளிர்ந்திடுதே – பார்
2. பஞ்சகாயங்களில் செஞ்சுனை பாயுதுபாவி நெஞ்சைக் கழுவ
சஞ்சீவி பஞ்சப் பிரளயம் சாவது தற்பரன் பக்கத்திலே – பார்
3. பாவநாசத்திலே புண்ணிய கன்மலை பார் முனி ஓங்கிய கோல்
கோபதாபத்திலே வீசின வீச்சிலே குமிழி விட்டோடுது – பார்
4. கல்வாரி வெப்பிலே கார் இருட்டிலே காணுது செவ்வானம்
நல்வாரி வீசுது செவ்வாரி பெய்யுது நாடு செவ்வானம் – பார்
5. பார்த்தால் கேட்ட மனுப்படிக் காகும் ஓ பாவி சிலுவையைப் – பார்
தீர்த்தார் பாவம் தீர்த்தபடி தகை தீர்த்திடலாம் ஓடிவா – பார்