பாலனே அழகிய பாலனே – Paalanae Azhagiya Paalanae song lyrics
பாலனே அழகிய பாலனே – Paalanae Azhagiya Paalanae song lyrics
பாடல் வரிகள்
பாலனே அழகிய பாலனே
அன்பின் வடிவே வந்தாயடா
நம்பிக்கை தந்த நல் அமுதே
என் வாழ்வின் அர்த்தம் சொன்ன பூங்காற்றே
ஆராரிரோ…..
1.தேவைகளை தேடி ஓடும் உலகில்
நீ மட்டும் ஏன் தொழுவம் தேர்ந்தாய்?
இரவின் மடியில் அமைதி உனக்காய்
பணியின் இதத்தில் புல்லணை உனக்காய்
ஒளிரும் விண்மீன் வெளிச்சம் உனக்காய்
குளிரும் நிலவின் வெளிச்சம் உனக்காய்
உள்ளங்கையிலே உன்னை தாங்கவா?
உச்சி கோர்த்து நான் முத்தம் தரவா?
2.சுகபோகம் விரும்பும் மனங்கள் நடுவே
நீ மட்டும் ஏன் எளிமை தேர்ந்தாய்?
இந்த இரவின் குளிரில் என் இதயம் உனக்காய்
பணியின் நனைவில் மலர்களும் உனக்காய்
அழகாய் தூங்க இசையும் உனக்காய்
குயிலின் காணமாய் என் கீதம் உனக்காய்
உள்ளங்கையிலே உன்னை தாங்கவா?
உச்சி கோர்த்து நான் முத்தம் தரவா?