பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics
பாவத்தில் நான் மூழ்கினேன்
சமாதானமில்லை
கறைபடிந்திருந்தேன்
எழும்பிடவில்லை
கடலின் எஜமானன்
என் சத்தத்தைக் கேட்டார்
நீரினின்றி உயர்த்தினார்
நானும் சுகமே
அன்பு என்னை உயர்த்திற்று
மற்றோர் உதவவில்லை
கிறிஸ்துதவினார்
அன்பு என்னை உயர்த்திற்று
மற்றோர் உதவவில்லை
அன்புயர்த்திற்று
2.என் இதயம் கொடுக்கிறேன்
அவரில் சாருவேன்
பிரசன்னத்தில் வாழுவேன்
துதியைப் பாடுவேன்
அன்பு வல்லமை சத்யம்
ஆத்துமா பாடிடும்
உண்மை சேவை யாவுமே
அவர்க்கு சொந்தமே
3. ஆபத்தில் நோக்கிப் பார்க்க
அவரே இரட்சிப்பார்
அன்பினாலே உயர்த்துவார்
கோப அலையினின்று
கடலின் எஜமானன் தான்
அலைகள் கீழ்படியும்
இரட்சகரும் அவரே
இரட்சை பெறு