பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor ooram
Lyrics :
பெத்தலகேம் ஊர் ஓரம்
சத்திரத்தின் முன்னணையில்
இயேசு பிறந்தாரே
மகாராஜா பிறந்தாரே
உயர்த்துவோம் சேர்ந்துபோற்றுவோம்
பாடுவோம் கொண்டாடுவோம்
1) சத்தியத்தின் சாட்சியாய் பிறந்தாரே
சத்தியத்தால் விடுதலை தருவாரே
சத்தியத்தில் நடக்க
பாதைக்கு தீபமாய்
உலகத்தின் ஒளியாய் உதித்தாரே -உயர்த்துவோம்
2) மேசியாவாம் இயேசு இராஜாவே
மேதினிலே மனுவாக பிறந்தாரே
மேன்மை வெறுத்தார்
மேன்மைப்படுத்த
மேலோகம் துதிக்க பிறந்தாரே