பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே – Belan ondrum illai yesuve
பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே – Belan ondrum illai yesuve
பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே (2)
நெரிந்த நாணல் நான்
மங்கி எரியும் திரிதான் (2)
-பெலன் ஒன்றும்
1. சிலுவை சமக்க ஆசை இருந்தும்
உலகின் பின்னே ஓடினேன்
விதையால் மண்ணில் வீழத் துணிந்தும்
சுயத்தில் வேரை ஊன்றினேன்
பெலவீனன் எந்தன் நீதி
அழுக்கான கந்தையே
உம் கிருபை ஆவியாலே
நடத்திடும் தந்தையே
பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே
2. ஒளியின் பாதை கண் முன் இருந்தும்
இருளின் இன்பம் தேடினேன்
மெழுகைப் போல உருகிட நினைத்தும்
திரியை மறைத்து வாழ்கிறேன்
எனில் ஒன்றும் மேன்மை இலலை
மெழுகு தான் ஐயா
உம் அன்பின் கரங்களில் மறையும்
ஒளிர்வேன் இயேசையா
-பெலன் ஒன்றும்