பேசினது போதுமப்பா நண்பா
பேசினது போதுமப்பா – நண்பா
பேசினது போதுமப்பா
1. எங்கெங்கு பார்த்தாலும் பேச்சு
இதுவா திருச்சபையின் மூச்சு
பாங்காக உழைப்பதோ போச்சு
பேச்சோடு நிறுத்திட லாச்சு
2. அன்பினைப் பற்றியே பேசி
அழகான சொற்களையே வீசி
அயலார்க்கு உதவிடவோ மறந்து
ஆண்டவனின் பணி செய்யா திருந்து
3. எத்தனை மாநாடு கூட்டினோம்
எத்தனையோ தீர்மானம் எழுதினோம்
என்னதான் நடந்தது சொல்லப்பா
என்னென்ன பணி செய்தோம் கூறப்பா