பேழையும் கட்ட கட்ட
பேழையும் கட்ட கட்ட
வேலை செய்த மனிதர்களும்
நோவா தாத்தா சொல்ல சொல்ல
மறுத்து மறுத்து போய்விட்டனர் (2) – பேழையும் கட்ட கட்ட
காலமோ செல்லச் செல்ல கர்த்தர் சொன்ன வார்த்தைகளை
நோவா தாத்தா சொல்லச் சொல்ல கேலி செய்து போய்விட்டனர் (2)
பாவம் உள்ள இந்த லோகம்
பாவத்திலே மாண்டு விடும்
என்ன சந்தோஷம் நமக்கு என்ன சந்தோஷம்
இயேசு வந்த உள்ளத்தில் நித்திய சந்தோஷம் – பேழையும் கட்ட கட்ட
1. பேழையும் கட்டி முடிக்க நோவா குடும்பம் எட்டுபேரும்
பேழைக்குள்ளே வந்து சேர்ந்தார் கர்த்தர் கதவை அடைத்துவிட்டார் – பாவம் உள்ள
2. கர்த்தர் இயேசு அழைக்கும்போது மறுத்து மறுத்து போனவர்கள்
இயேசு வாரும் நாளதிலே கதறி கதறி புலம்புவார்கள் – பாவம் உள்ள