பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள் – நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள்
1. பெருமை என்ற வலையில் விழாதே – அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் –உன்னை
அநுதினமும் நடத்திச் செல்வாரே