மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில் -Magilvom Magilvom Yesu Natharil

Deal Score+1
Deal Score+1

மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில் -Magilvom Magilvom Yesu Natharil

1. மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்
அகமகிழ்ந்திடுவோமே மோட்ச ராஜ்யம்
நமக்காய் ஆயத்தமாகுது என்றென்றும் ஆனந்தமே

2. துன்பமுமில்லை, துயரமுமில்லை
அன்பு நிறைந்த வீடாம் – இன்பம் நிறைந்து துதிப்பார்
அங்கேயுள்ளோர் ரத்தத்தால் மீட்படைந்தோர்

3. பஞ்சமுமில்லை பசியுமுமில்லை
கொஞ்சமேயில்லை – தஞ்சம் இயேசு நாயகன்
தரணியே ஜெயித்தவர் அரமனை ஆட்சி செய்வார்

4. சாத்தானில்லை, சத்துருவில்லை
கத்துவோரில்லை – அத்தன் இயேசுவோடு
கூடிப்பாடி யோடி யுலாவலாம்

5. தங்கத் தெருவாம் இங்கித வீட்டில்
மங்களம் பாடலாம் – சொந்தம் இயேசு அண்ணலை
ஸ்துதித்துப் பாடுவார் நாமும் பாடலாம்

6. அல்லேலூயா பாடி மிகவும்
ஆர்ப்பரித்திடலாம் நாம் – இல்லை மாய உலகம்
அங்கேயில்லை பூரித்திடலாம்

7. கெட்ட குமாரனும், பட்ட மனிதனும்
துஷ்ட மானிடரும் – விட்ட இயேசு நாதரை
முட்டியே அழைத்தால் பட்டணம் போகலாமே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo