மங்கா சுபகன மங்களமே மனம் – Manga Subakana Mangalamae manam

Deal Score+2
Deal Score+2

மங்கா சுபகன மங்களமே மனம் – Manga Subakana Mangalamae manam

1. மங்கா சுபகன மங்களமே – மனம்
நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை
சிங்கா தனபதி நீ அருளே
மங்களம் மங்களம் மங்களமே

பல்லவி

ஓங்கா உனதருள் பொங்கா
உனதொளி தாங்கா சகலமும்
வாங்கா திருவொளி

2. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல்
சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம்
மணமக்கள் இருவர் மேலுமே நீர்
உம்மாசீர்வாதம் இன்றருளும் – ஓங்கா

3. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல்
ஈசனருள் வரம் பெற்று வாழ – நம்
ஈசாயின் கிளையை அண்டினோராய் உம்
நாம மகிமைக் கென்றுழைக்க – ஓங்கா

4. தந்திவர் சமதம் உமக்கென்றுமே – அதில்
உந்தனின் ஜெபத்தகம் பதித்தென்றுமே
தந்திர சோதனை ஜெயித்தென்றுமே
சந்ததம் சந்ததம் சந்ததமே – ஓங்கா

5. பாடகர் பாடலின் கவி பலிக்க – தூதர்
துத்திய கீதங்கள் நிதமுடிக்க – மண
மாப்பிள்ளை பெண்மேல் பதம் படிக்க
நித்திய நித்தியமே செழிக்க – ஓங்கா

6. மங்களம் சோபனம் உமக்கென்றுமே – எம்
மங்கள கீர்த்தனம் துதி உமக்கே – தூதர்
துத்திய ஸ்தோத்திரம் என்றென்றுமே
ஆவி பிதா சுதனானவர்க்கே – ஓங்கா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo