மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics
மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics
மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலே (2)
மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யா
மடிவோரை மீட்க வேண்டுமே (2)
இயேசுவே இயேசுவே
எங்கள் பாவங்கள் மன்னியுமே
இயேசுவே இயேசுவே
எங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமே
உந்தன் பாதம் வந்து நிற்கிறோம்
எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2)
1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்
மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (2)
தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்
எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2)
2, எந்தன் முகத்தை தேடும் போது
ஷேமம் வரும் என்றுரைத்தவரே (2)
அப்பா உம் முகத்தை தேடுகிறோம்
அன்பே நீர் மனமிரங்குமே (2)
3, எங்கள் நாட்களில் எழுப்புதலை
எந்தன் கண்களால் காணணுமே (2)
நாட்களும் நீடிக்க வேண்டாமைய்யா
என் இந்தியா இயேசுவுக்கே
நாட்களும் நீடிக்க வேண்டாமைய்யா
என் பாரதம் இயேசுவுக்கே (2)