மறுபடியும் தேற்றுவீரே – Marumadiyum Theattruveerae
மறுபடியும் தேற்றுவீரே – Marumadiyum Theattruveerae
மறுபடியும் தேற்றுவீரே இயேசையா
என்னை மறக்காமல் தாங்குவீரே இயேசையா
மறக்கவில்லையே மார்போடு அணைத்து கொண்டீரே
தேடி வந்தீரே தீமைகளை அகற்றி விட்டீரே
1)காணாமல் போன ஆடாய் இருந்தேனே இயேசையா
கண்ணோக்கிப் பார்த்தீரே கவலைகளை மாற்றினீரே.
2)துன்மார்க்கமான என்னை தொட்டீரே இயேசையா
தூரமாய் போன என்னை தோள் மீது துமந்தீரே.
3)கண்ணிருந்தும் குருடனாய் இருந்தேனே இயேசையா
மனக்கண்ணை திறந்தீரே மெய்யான வெளிச்சம் நீரே.