மாயையில் மனம் ஓடவையாதே உன்னை – Maayaiyil Manam Udayavaiyathae
மாயையில் மனம் ஓடவையாதே உன்னை – Maayaiyil Manam Udayavaiyathae
1. மாயையில் மனம் ஓடவையாதே – உன்னை
விட்டாலது கொஞ்சம் நில்லாது;
பாவையில் கட்டின கயிற்றைப் போல் – அகற்றுப்
போகக் காலம் கிட்டி வருகுதைய்யோ;
ஒரு வழி பாரு தினம் உன்னை நேரு
2. பூலோக வாழ்வதின் புகழென்ன? – பூ
வாடி உதிர்ந்தால் அதின் நிறமென்ன?
மாய உலகிலுனக்கென்ன? – ஜீவன்
வம்பில் விடுத்தால் அதன் பலமென்ன?
மாயை மறந்தோடு சுக இடம் தேடு
3. பலமுள்ள சிம்சோனைக் குறைவு செய்த – படு
பாதகி நீயே தாசி தெலீலாளே!
மன திழந்த மொழியைக் கேட்டாயே – கெட்ட
பெலிஸ்தர் கையிலவனைக் கொடுத்தாயே
படுபாதகியே, நரகவாசி நீயே
4. கழுதை எலும்பால் ஜெயங்கொண்டவனே – நீ
அழுது புலம்பி மாவரைப்பதென்ன?
பரகதி வாழ்வை நீ கெடுத்தாயே – பலர்
பரிகாசம் செய்ய உன்னைக் கொடுத்தாயே
மதி மறந்தவனே, துயரடைந்தவனே