மேன்மையான பாத்திரம் – Maenmaiyaana Paathiram
மேன்மையான பாத்திரம் – Maenmaiyaana Paathiram
மேன்மையான பாத்திரமாய் வனைந்து வைத்தீரே
உம் கரத்தில் என்னையும் தாங்கிக் கொண்டீரே – 2
தகுதியே இல்லா என்னையும் நினைத்து
உந்தன் ஆவியை ஊற்றினீரே – 2
குறைவுள்ளவன் என்னையும் நிறைவாக்கினிரே – 2
வாரும் ஆவியே தூய ஆவியானவரே
என்னை நடத்துமே நடத்தி நிரப்பி அனுப்புமே – 2
1. நோவாவுக்கோ தந்த கிருபை வேண்டுமே
மோசேயின் மேல் இறங்கின அந்த மகிமை வேண்டுமே – 2
சோர்ந்து போகா ஆவியை ஊற்ற வேண்டுமே
நிரம்பி வழிந்து உம்மை நான் துதிக்க வேண்டுமே – 2
நிரம்பி வழிந்து உம்மை நான் துதிக்க வேண்டுமே
வாரும் ஆவியே . . . . . . . – 2
2. அசுத்த உதடு உள்ள மனுஷனாயிருந்தேனே
உந்தன் காரியமாய் நிரப்பி என்னை அனுப்பி வைத்தீரே – 2
யாரை நான் அனுப்புவேன் என்று கேட்டீரே
அடியேன் என்னைத் தருகிறேன் அபிஷேகம் செய்யுமே
யாரை நான் அனுப்புவேன் என்று கேட்டீரே – 2
அடியேன் என்னைத் தருகிறேன் அபிஷேகம் செய்யுமே
வாரும் ஆவியே . . . . . . . – 2