யாரிடம் செல்வோம் இறைவா – Yaaridam Selvom Iraiva
யாரிடம் செல்வோம் இறைவா – Yaaridam Selvom Iraiva
யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா, இறைவா – யாரிடம் செல்வோம்
சரணங்கள்
1. அலை மோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும்
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரணைப்பாய் (2) – இறைவா
2. வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலரினைப்போல்
உலகிருக்கும் நிலைகண்டும்
உமது மனம் இரங்காதோ (2) – இறைவா
3. மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா
குணமதிலே மாறாட்டம்
குவலயம்தான் இணைவதெப்போ (2) – இறைவா
4. அமைதி ஒன்றைத் தேடிவந்தேன்
நீ என்றே உன்னைத் தொடர்ந்தேன்
பாருலகில் என் ஆறுதல் யார்
நீஅன்றேல் என் துணையார் (2) – இறைவா