யுத்தம் செய்தீர் – Yutham Seitheer
யுத்தம் செய்தீர் – Yutham Seitheer
Lyrics:
என் பகைஞர்களெல்லாம் மேற்கொள்ளும்பொது
எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
என் பகைஞர்களெல்லாம் மேற்கொள்ளும்பொது
எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
துதிப்பேன் நான் துதிப்பேன்
வெட்டுண்டு விழுந்தார்களே
துதிப்பேன் நான் துதித்திடுவேன்
வெட்டுண்டு விழுந்தார்களே
அவர்களை வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும்
பதரைபோல் சிதறடிப்பீர் – 2 (எரேமியா 13:24)
1 . சத்ருக்கள் கண்கள் முன்பாக
என்னை எண்ணெயால் அபிஷேகித்தீர்
என் சத்ருக்கள் கண்கள் முன்பாக
என்னை மேன்மையாய் உயர்த்தி வைத்தீர்
நானோ கர்த்தரின் வீட்டில் நீடித்த நாட்களாய்
என்றென்றும் நிலைத்திருப்பேன்
நானோ கர்த்தரின் வீட்டில் நித்திய நாட்களாய்
என்றென்றும் நிலைத்திருப்பேன் – (சங்கீதம் 23)
2. கால்கள் தவறும்போது
என்னை மேற்கொள்ளத் துடித்தார்களே
என் கால்கள் தவறும்போது
என்னை மேற்கொள்ளத் துடித்தார்களே
அவர் பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கின்றார்
பயமொன்றும் எனக்கில்லையே – 2
கர்த்தர் பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கின்றார்
தோல்விகள் எனக்கில்லையே – 2
3. சத்ருக்கள் அழிந்துபோவார்கள்
அவர்கள் அழிந்துபோவார்களே
(அறுப்புண்டுபோவார்களே) – 2
சாத்தானை பூமியிலிருந்து நிர்மூலமாக்கி,
களிம்பைப்போல அகற்றிடுவீர் – 2
4. பொல்லாதோர் விரித்த வலையில் என்
கால்கள் சிக்காமல் பாதுகாத்தீர் )
பொல்லாதோர் செய்த சதியில் என்
கால்கள் மூழ்காமல் பாதுகாத்தீர்
நமக்கு மறைவாக வைத்த, வலையில் அவர்கள்
கால்களே அகப்பட்டதே
நமக்கு மறைவாக செய்த, சதியில் அவர்கள்
கால்களே மூழ்கினதே
என் பகைஞர்களெல்லாம்மேற்கொள்ளும்பொது
எனக்காய் நீர் யுத்தம் செய்தீர்
துதித்தேன் நான் துதித்தேன்
வெட்டுண்டு விழுந்தார்களே
அவர்களை வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும்
பதரைபோல் சிதறடித்தீர் – 2
யுத்தம் செய்தீர் | Yutham Seitheer | New Tamil Christian Song
En Pagainger Ellaam Maekollum pothu