வந்தாளும் யேசுவே வாருமிதில்- Vanthalum yesuve vaarumithil

Deal Score0
Deal Score0

வந்தாளும் யேசுவே வாருமிதில் – தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்

1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா

2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர்
யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று
கர்த்தனே நீர் காட்டியே நற்குணம்
அவர்க்கு நல்கிடும் – தேவா

3.சக்தியில்லை எங்களுக்கு
சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து
தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட – தேவா

4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்
உத்தரம் பின்னும் நீ அறிந்திடாத
வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே – தேவா

5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள்
கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும்
மேற்கொள்ளாதென்றீர் ஆதலாலனந்த
ஸ்தோத்திரம் – தேவா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo