வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe peruguga entre

Deal Score+1
Deal Score+1

வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe Peruguga Entre song lyrics

1. வளர்ந்தே பெருகுக என்றே – உளம்
மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர்
தளர்ந்தே சோர்வுறும் கால்களே – பலம்
அடைந்தே நடந்திட வாரீர்

பல்லவி

பெருகுவோம் – வளர்ந்து
பெருகுவோம் – தேவன்
அருளும் ஆவியின்
அருமையாம் ஒளியில் – வளர்ந்தே பெருகுவோம்

2. இருநூறாண்டுகள் இறைவன் – நெல்லைத்
திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார்
வரும்பல ஆண்டுகள் எல்லாம் – இன்னும்
பெருகிட அருள்வரம் ஈவார்

3. பிரிவினை எழுந்திடும் நேரம் – நம்மைக்
கரிசனை யோடவர் இணைத்தார்
உரிமையாய் ஒருமையில் வளர – அவர்
பரிவுடன் தினம் நடத்திடுவார்

4. தூய்மையில் தவறிய வேளை – நம்மைத்
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு மேலும் – நம்மைத்
தாங்கியே தினம் அணைத்திடுவார்

5. ஒளியென உலகினில் வந்தார் – நம்மை
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாக – என்றும்
ஒளிர்ந்திட ஓடியே வாரீர்

Valaranthe peruguga entre song lyrics in english

1.Valaranthe Peruguga Entre Ulam
Magilnthae Pugalnthida Vaareer
Thalarnthae Soarvurum Kaalkalae Balam
Adainthae Nadanthida Vaareer

Peruguvom Valarnthu
Peruguvom Devan
Arulum Aaviyin
Arumaiyaam Ozhiyil – Valarnthe Peruguvom

2.Irunoorandungal Iraivan Nellai
Thirusabai Valarnthida Nearnthaar
Varumpala Aandugal Ellaam Innum
Perugida Arul Varam Eevaar

3.Pirivinai Elunthidum Nearam Nammai
Karisanai Yodavar Inaiththaar
Urimaiyaai Orumaiyil Valara Avar
Parivudan Dhinam Nadaththiduvaar

4.Thooimaiyil Thavariya Vealai Nammai
Thooyavar Thookkiyae Eduththaar
Thaaimaiyin Karam Kondu Mealum Nammai
Thaangiyae Dhinam Anaiththiduvaar

5.Ozhiyena Ulaginil Vanthaar Nammai
Ozhiyena Vilangida Alaiththaar
Ozhi Tharum Deepangalaga Entrum
Ozhirnthida Oodiyae Vaareer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo