வாழ்விலே ஒரே நோக்கம் – Vaazhvile Ore Nokkam

Deal Score0
Deal Score0

வாழ்விலே ஒரே நோக்கம்
ஒரே ஒரு நோக்கம் தான்
இயேசுவுக்காய் வாழ வேண்டும்
அவருக்காய் வாழ வேண்டும்
இயேசுவுக்காய் மடிய வேண்டும்
சேவை செய்து மடிய வேண்டும்-2

1.நேசர் அன்பை அறியாமல்
உலக ஆசையில் அமிழ்ந்தேனே
அன்பை தேடி அலைந்தேனே
பல திசையில் திரிந்தேனே
ஏமாற்றம் அடைந்தேனே
துக்கத்தில் ஆழ்ந்தேனே-2
ஒரு நாள் இன்ப சத்தம்
கேட்டு பாதம் அடைந்தேனே
நேசர் பாதம் விழுந்தேனே-வாழ்விலே

2.நேசர் பாதம் விழுந்த நான்
அவர் முகம் பார்த்தேனே
கண்களில் கண்ணீரும்
முகத்தில் துக்கம் கண்டேனே
ஏன் ஐயா என்றேனே
துவண்டு போனேனே-2
எனக்காய் உழைப்பாயா
என்ற சத்தம் கேட்டேனே
தத்தம் செய்ய துடித்தேனே-வாழ்விலே

3.தத்தம் செய்த என் வாழ்க்கை
சவால்கள் அநேகம் சந்தித்ததே
துக்கங்கள் மத்தியிலும்
குற்றச்சாட்டின் நடுவிலும்
விசுவாசம் தோன்றினதே
வெற்றிக்கல்லாய் மாறினதே-2
தொடர்ந்து முன்னேற
கிருபை மட்டும் சார்வேனே
சார்ந்து முற்றும் வெல்வேனே-வாழ்விலே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo