விண்ணப்பத்தை கேட்கும் தேவன் – Stanley Prabhuraj
விண்ணப்பத்தை கேட்கும் தேவன் – Stanley Prabhuraj
விண்ணப்பத்தை கேட்கும் தேவன் விழித்துஇருக்கிறார்
நான் கேட்கும் பெட்டிசனுக்கு பதில் தருகிறார்
நேரம் வரும்வரைக்கும் காத்திருக்கிறார்
அவர் சொன்ன சொல்லை நிறைவேற்றிடுவார்
Chorus
என் ஏசு என்முன் இருக்கையிலே
எதை குறித்தும் எனக்கு பயம் இல்லையே
என் ஏசு வலப்புறத்தில் நிற்கையிலே
யாராலும் என்னை அசைக்கமுடியாது
——— விண்ணப்பத்தை
(1)
நிலையற்ற இலக்கை நோக்கி ஓடமாட்டேன்
நித்திய இலக்கை நோக்கி ஓடிடுவேன் — (2)
மாராவின் கசந்த நீரை மதுரமாய் மாற்றியதைப்போல்
என் வாழ்வை நன்மையால் முடிசூட்டினார் — (2)
——— என் ஏசு என்முன் இருக்கையிலே
(2)
சுயமுள்ள சித்தத்தின்படி நடக்கமாட்டேன்
தேவ சித்தத்தின் படி நடந்திடுவேன் — (2)
கன்மலை அடித்து ஜீவதண்ணீர் தந்தது போல்
பாலைவன வாழ்வை சோலைவன மாக்கினார் – (2)
——— என் ஏசு என்முன் இருக்கையிலே
(3)
விசுவாச ஜீவிதத்தை காத்துகொள்வேன்
வாக்குத்தத்த வார்த்தைகளை சுதந்தரிப்பேன்- (2)
இருளில் இருந்த என்னை கிருபையால் சூழ்ந்து கொண்டார்
வெளிச்சத்தை தந்தவர்க்கு சாட்சியாய் வாழ்வேன் – (2)
——— என் ஏசு என்முன் இருக்கையிலே