ஓடிவா ஜனமே கிறிஸ்து – Oodiva Janame Kiristhu Lyrics

Deal Score0
Deal Score0

ஓடிவா ஜனமே கிறிஸ்து – Oodiva Janame Kiristhu Lyrics

பல்லவி

ஓடிவா, ஜனமே; -கிறிஸ்து வண்டைக்
கோடிவா, ஜனமே; “பண்டிகைக் கொண்
டாடிவா, ஜனமே; -அவர் பாதத்தைத்
தேடிவா, ஜனமே.

அனுபல்லவி

நீடு சமர்புரி கோடி அலகையை
நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலைக் கண் (டு)

சரணங்கள்

1.நேர்ந்தடிகள் துதித்து, -நித்திய ஜெபத்தில்
நீதித் தவங்கள் கதித்து,
சேர்ந்தருளை மதித்து, -சோதிக்கச் செய்த
தீய சர்ப்பத்தை மிதித்து, -அநித்தியமான
ஜெக ஜாலத்தைப் பணித்து; அகத் ‘தாக்ரமத்தை விட்டு,
திட்டமாக நின்று, பத்துக் கற்பனைப்படியே சென்று.
தேவ துந்துமி முழங்க, -சங் கீதங்களும்,
பா வினங்களும் விளங்க, – அதன் ஒலியால்
அண்டமும் குலுங்க, பர மண்டலங்களும் இலங்க
ஆராதனைகள் செய்து, சீராய் நடந்துகொண்டு,
அரிய பரம் பொருள் ஒருவனை நெஞ்சகம்
உருகி ‘நடம் செய்து, பெருகிய அன்புடன்,

2.ஞானஸ்தானம் பெற்று, -சுருதி நூலின்
மேன்மைச் சாஸ்திரம் சுற்று,
ஈனப் பாவிகள் சுற்று, மாயங்கள், ‘அக்கி
யானக் கிரியைகள் அற்று, -‘மாங்கிஷத்தின்
இருளாந்த காரம் நீங்கி, அருளானந்தங்கள் ஒங்கி,
இஷ்டமாய் நடந்தெலார்க்கும் துஷ்டத்தனப் பொல்லார்க்கும்
ஏசு நேசத்தைச் சூட்டி, -மனோகரத்தால்
பாசத்தன்பு பாராட்டி, கவனமாக
அந்தி சந்தியும் ஜெபங்கள், மந்திரங்களைப் படித்து,
ஆண்டாண்டெமைக் கரிசித்து, மீண்டாண்ட னுக்ரகித்த
அறிவுகள் இங்கிதக் கிருபை விளங்கிய
திரிமுதலின் சரண் உறுதியுடன் தொழ.

Oodiva Janame Kiristhu Lyrics in English

Oodiva Janame Kiristhu Andai
Kodiva Janamae Pandikai Kondadiva
Janamae Avar Paathathai
Theadi Va Janamae

Needu Samarpuri Koadi Alagaiyai
Nikarithu Vaal Piditha Ukkara Manuvealanai Kandu

1.Nearnthadigal Thuthithu Nithiya Jebathil
Neethi Thavangal Kathithu
Searntharulai Mathithu Sothikka Seitha
Theeya Sarpathai Mithithu Anithiyamaana
Jega Jaalathai Panithu Agath Thakramathai Vittu
Thittamaaga Nintru Paththu Karpanaipadiyae Sentru
Deva Thunthumi Mulanga Sangeethangalum
Paa Vinangalum Vilanga Athan Oliyaal
Andamum Kulunga Para Mandalangalum Elanga
Aarathanaigal Seithu Seeraai Nadanthu Kondu
Ariya Param Porul Oruvanai Nenjagam
Urugi Nadam Seithu Perugiya Anbudan

2.Gnansthanam Pettru Suruthi Noolin
Meanmai Sasthiram Suttru
Eena Paavigal Suttru Maayangal Akki
Yaanai Kiriyaigal Attru Maangishathin
Irulantha Kaaram Neengi Arulanangangal Oongi
Istamaai Nadanthellarkkum Thustathan Pollarkku
Yesu Neasathai Sootti Manokarathaal
Paasathanbu Paaratti kavanamaga
Anthi Santhiyum Jebangal Manthirangalai Padithu
Aandaandu Emai Karisithu Meendandu Anukrakitha
Arivugal Ingitha Kirubai Vilangiya
Thirimuthalin Saran Uruthiyidan Thozha

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo