நீர் இரங்கினால் – Neer Iranginal Uyir Song lyrics

Deal Score0
Deal Score0

நீர் இரங்கினால் – Neer Iranginal Uyir Song lyrics

நீர் இரங்கினால் உயிர் வாழ்வேன்
முகம் மறைத்திட்டால் மடிந்து போவேன் (2)

உங்க இரக்கம் வேண்டுமே
உங்க கிருபை தாருமே
கொஞ்சம் இரக்கம் வேண்டுமே
உங்க கிருபை தாருமே. – நீர் இரங்கினால்

1. ஏற்ற வேளையில் தருவீர் என்று
எல்லா ஜீவன்களும் உமை நோக்குமே – உம்
கரங்கள் திறக்க அவை வாங்கி கொள்ள
வரும் நன்மையால் திருப்தி ஆகிடுமே – (2)

முகம் மறைத்தாலோ திகைத்திடுமே
மூச்சை மறைத்தாலோ மண்ணுக்கு திரும்பிடுமே – (2) – உங்க இரக்கம்

2. உம் ஆவியை அனுப்ப அனைத்துமே இன்று
அகிலத்திலே சிருஷ்டிப் பாகிடுமே
உம் வார்த்தையால் வரும் வல்லமை அருள
இந்த பூமி ரூபம் புதி தாகுமே – 2

உம் மகிமையும் விளங்கிடுமே
உம் கிரியையினாலே மகிழ்ந்திடுவீர் – (2) – உங்க இரக்கம்

3. எந்தன் நிந்தை அவமானம் அறிந்தவரே
வேதனை உள்ளத்தைப் பிளந்ததுவே
நான் சிறுமையும் எளிமையும் ஆனவனே
என் இருதயம் எனக்குள் நொறுங்கியதே – (2)

எனக்காகப் பரிதவிக்க எவரும் இல்லை
என்னைத் தேற்ற இப்பூவில் ஒருவரில்லை – (2) – உங்க இரக்கம்

4. என் பாடு யாவும் ஏற்றனரே
மாகேடு அடைந்தே உயிர் தந்தீரே
கல்வாரி காயங்கள் ஏற்றவரே
உம் தழும்புகளால் சுகமாக்குவீரே – (2)

உம் சிலுவையின் நிழலில் வந்தேன்
என் வாழ்நாளெல்லாம் உம்மைத் தொழுதிடுவேன்.
நீர் எனை இன்று குணமாக்குமே
என் ஜீவன் உள்ளவரை நன்றி சொல்வேன் – (2) – நீர் இரங்கினால்

தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. (யோபு 33:4)
The Spirit of God hath made me, and the breath of the Almighty hath given me life. (Job 33:4)

கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும். (சங்கீதம் 69:16)
Hear me, O LORD; for thy lovingkindness is good: turn unto me according to the multitude of thy tender mercies. (Psalms 69:16)

கொரோனா வந்த காலங்களில் சுவாசப் பிரச்சனையில் மரித்தவர்கள் கோடிகளில் உண்டு. வியாதிப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்த ஒரு சகோதரிக்காக விண்ணப்பம் ஏறெடுக்கப்பட்ட போது கிடைத்த பாடல் வரிகள், அவர்களுக்கு சுகம் தந்து, வாழ்நாட்களை இன்னும் சில வருடங்கள் நீடிக்கச் செய்தது. இப்பாடலை பாடி விண்ணப்பிக்கிற அனைருக்கும் தேவன் ஜீவனை கட்டளையிடுவார் என விசுவாசியுங்கள். உங்கள் விசுவாசமே உங்களை இரட்சிக்கும்.
Millions of people have died due to respiratory problems during the time of Corona. The song received, when a prayer was offered for a sister who was sick and on the verge of death, the lyrics brought comfort, healed, and extended her life for a few more years. Believe that God will give life to those who pray by singing this song. Your faith will save you. Glory be to Jesus alone.

பாடலுக்கு இசையத்த சகோ. வில்பிரட் சைரஸ், பாடல்வரிகளுடன் ஒளிவடிமாக்கிய சகோ. சாலமன், பாடலைப் பாடி மெருகூட்டிய சகோதரி. ஜெயா இவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுவதாக. வெளியிடப்படுவதற்காக ஜெபித்த மேய்ப்பர் மரியசிங்கராயர் அவர்களுக்கும் நன்றிகள்.

Neer Iranginal Uyir Song lyrics in Tamil

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo