
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் 
கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் 
உந்தனின் பலனை உந்தனின் கரத்தில் 
நன்றி நிறைந்த இதயத்தோடு (2)
இன்று அர்ப்பணம் செய்கின்றோம்
ஏற்றுக்கொண்டருளும் பிதாவே
தாயின் வயிற்றில் உருவாகும் 
முன்னே – முன்னறிந்தவர் நீரே
பிரமிக்கத்தக்க அதிசயமாய் 
என்னை உருவாக்கி மகிழ்ந்தீரே
கண்மனி போல காத்துக்கொண்டீரே 
– கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே..
பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு
நீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..
அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்
என்று உரைத்தீரே…
இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –
ஆசீர்வதித்தென்றும் அரவணையும்..
ஞானம் வளர்த்தி கிருபை தயவால் 
என்றும் ஆசிர்வதித்திடுமே…
விருத்தியடைந்து பெருகிட 
செய்யும் உந்தன் கிருபையாலே…
பெற்றோரை கனம் பண்ணி என்றும் கீழ்ப்படிந்து – 
ஒலிவமர கன்றாய் வளரச்செய்யும்

