எனது எல்லாம் அறிந்தவர் – Enathu Ellam Arinthavar

Deal Score0
Deal Score0

எனது எல்லாம் அறிந்தவர் – Enathu Ellam Arinthavar Tamil Christian song lyrics written, tune and sung by Pr. V. Zechariah Johnson

எனது எல்லாம் அறிந்தவர் நீர்
என்னை முழுதாய்
புரிந்தவர் நீர். – 2

என்னை வெறுக்காமல்
என்னை ஒதுக்காமல்

என்னோடு வாழ்கின்றீர்
எனக்குள் வாழ்கின்றீர்

தந்தையே

உம்மைப்போல
யாரும் இல்லையே

தந்தையே

உம் அன்புக்(கு) இணை ஒன்றும் இல்லையே – 2

உம் அன்புக்(கு) இணை என்றும் இல்லையே – 2

எத்தனையோ முறை
எத்தனையோ பிழை
ஏதேதோ நான் செய்தேன்

மனம் போல் திரிந்தேன்
மதங்கொண்(டு) அலைந்தேன்
மதியற்று நான் சென்றேன்

எத்தனையோ முறை
எத்தனையோ பிழை
ஏதேதோ நான் செய்தேன்

மனம் போல் திரிந்தேன்
மதங்கொண்(டு) அலைந்தேன்
மதியற்று நான் சென்றேன்

காக்கின்ற
நல்ல மேய்ப்பரே
கண்டென்னை
தேடி வந்தீரே – 2

தோளில் சுமந்து தூக்கி வந்தீரே
மந்தையில் சேர்த்து மகிழச் செய்தீரே.

எனது எல்லாம் அறிந்தவர் நீர்
என்னை முழுதாய்
புரிந்தவர் நீர்.

என்னை வெறுக்காமல்
என்னை ஒதுக்காமல்

என்னோடு வாழ்கின்றீர்
எனக்குள் வாழ்கின்றீர்

கெட்ட மகன் போல் துஷ்டனாய் அலைந்தேன்
கேடு கெட்டு ஒழிந்தேன்
கேவலமானேன். – 2

மன்னிப்பு நாடி வந்தேனே
மகன் என்று
ஓடி வந்தீரே – 2

மார்போடு அணைத்து முத்தம் தந்தீரே

மகுடம் சூட்டி அழகும் செய்தீரே.

எனது எல்லாம் அறிந்தவர் நீர்
என்னை முழுதாய்
புரிந்தவர் நீர். – 2

என்னை வெறுக்காமல்
என்னை ஒதுக்காமல்

என்னோடு வாழ்கின்றீர்
எனக்குள் வாழ்கின்றீர்

தந்தையே

உம்மைப்போல
யாரும் இல்லையே

தந்தையே

உம் அன்புக்(கு) இணை ஒன்றும் இல்லையே – 2

உம் அன்புக்(கு) இணை என்றும் இல்லையே – 2

எனது எல்லாம் அறிந்தவர் song lyrics, Enathu Ellam Arinthavar song lyrics, Tamil songs

Enathu Ellam Arinthavar song lyrics In English

Enathu Ellam Arinthavar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo