Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
பல்லவி
சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.
சரணங்கள்
1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்
2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்
காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்
3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்
4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார். – சரணம்
5. துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,
துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார். – சரணம்
6. முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார். – சரணம்