Aagila Ulagam Nambum – அகில உலகம் நம்பும்
அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்
1. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – என் நேசர்
2. பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே
3. வல்லமையின் தகப்பனே
வியத்தகு அலோசகரே
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே
4. உம சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே
5. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே