ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan
1. ஆணி முத்தைக் கண்டேனே நான்!
மகிழ் கொள் உள்ளமே;
இரட்சகா உம்மைப் போற்றுவேன்,
இரட்சண்ய மூர்த்தியே!
2. சர்வ சக்ராதிபதியே!
இராஜாதி இராஜாவே!
நேர் பாதை காட்டும் தீபமே!
நீதியின் ஜோதியே!
3. தேவ சிங்கார வனத்தின்
ஜீவ விருட்சமே!
பாவத்தை நீக்கும் இரட்சகன்
ஷாரோன் ரோஜாப் பூவே!
4. சுவர்க்கத்தின் ஜோதி நாயகா
என் திவ்யாமிர்தமே
என் ஆதியே என் அந்தமே
என் ஜீவனும் நீரே