Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர்
“ஆனந்தம் ஆனந்தமே” என்ற மெட்டு
பல்லவி
ஆர்ப்பரித்திடுவோமே, நம் ஆண்டவர் இயேசுவையே
இந்தியா இரட்சணிய சேனையின்
நூற்றாண்டு விழா இதனில்
அனுபல்லவி
பரமன் தயவால், ஊழியம் பெருகி
பரம்பிடக் கிருபை கூர்ந்தார்
1. ஆயிரத்தெண்ணூற்றி எண்பத்தி இரண்டிலே
செப்டம்பர் பத்தொன்பதில் – சேனை யூழியர் நாலுபேரால்
2. பாரதப் பூமியிலே, பம்பாய்க் கப்பல் துறையில் வந்த
தேவ பக்தன் பக்கீர் சிங்குமாய் பம்பாயில் வேலை யாரம்பித்ததே
3. சென்ற நூற்றாண்டுகளாய், நம் சேனை இந்தியாவிலே – தூய
சேவை பெருகிடவே, செய்த தேவனுக்கே மகிமை
4. சேனைக் கொடி பிடித்தே, வந்த தேவ தூதுவர்களால்
செய்த சேவையை ஊக்கமுடன் செய்து இயேசுவைப் பின் தொடர்வோம்