Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது
அபிஷேகம் இறங்குது
அனல் கொண்டு வீசுது
வல்லமை பெருங்காற்று
ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது
ஆவியின் பெருங்காற்று
வீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்று
வீசட்டும் அக்கினி சுழல் காற்று
1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே – எங்கும்
புதுபுது வல்லமை பெருகிடுதே
அற்புதம் நடக்கின்றதே
பேய்களும் பறந்தோடுதே
2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே – இங்கு
எலிசாவின் வல்லமை கூடிடுதே
இரட்டிப்பு வல்லமையே – அது
இயேசுவின் வல்லமையே
3. செங்கடல் இரண்டாக பிளக்கின்றதே – எங்கும்
ஜெயதொனி ஏகமாய் கேட்கின்றதே
வானங்கள் திறக்கின்றதே
வார்த்தைகள் தொனிக்கின்றதே