Agavirunthaga En – அகவிருந்தாக என்
அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா ( 2 )
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே ( 2 )
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2
எமை உமதுடலென நீ மாறவைத்தாய் 2
2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் ( 2 )
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 இனி
உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்