Airam irunthenna enaku – ஆசையெனும் கோட்டைகட்டி
ஆசையெனும் கோட்டைகட்டி
அகிலத்தில் நான் அலைந்தேன்
அவையாவும் மாயையேனும்
அருள்மொழியை நான் மறந்தேன்
சோந்தங்கள் பிரிந்துவிடும்
பந்தங்கள் பறந்துவிடும்
தாய் தந்தை என்னை மறப்பார் தயாபரனே
நீர் என்றும் என்னை மறப்பதில்லை – (2)
பல்லவி
ஆயிரம் இருந்தென்ன எனக்கு
உன் ஆலயம் ஒன்றே போதும்
ஆயிரம் இருந்தென்ன எனக்கு
உன் ஆறுதல் ஒன்றே போதும்
நாளெல்லாம் வாழ்ந்தென்ன எனக்கு – (2)
என் நாயகன் அன்பு ஒன்றே போதும் – (2)
சரணங்கள்
1) கண்களின் காட்சியில் நான் நடந்தேன்
மாயையேனும் மஞ்சமதில் தஞ்சம் புகுந்தேன் – (2)
சோதனை மிகுந்தபோது நெஞ்சம் உடைந்தேன்
என் வேதனை நீங்கிடவே உம்மை அழைத்தேன்
மாறாத துன்பமதில் மனம்கசந்தேன் … தேவா … (என்) (2)
ஜெபம் எனும் கண்ணீரால் பாதம் (உம்) நனைத்தேன் – (2)
2) ஆஸ்திகள் மலைபோல் குவித்தாலும்
இந்த அகிலமே உன் கையில் இருந்தாலும்
ஆத்தும மீட்பு இல்லை என்றால் – (2)
அவைகளினால் ஒரு லாபம் இல்லை
ஆண்டவர் பாத்திரத்தில் பங்கும் இல்லை… மகனே …(என் ) – (2)
அருள்நாதர் மாளிகையில் இடமும் இல்லை – (2)