Akkini Irakkum Deva – அக்கினி இறக்கும் தேவா
அக்கினி இறக்கும் தேவா
ஆவியை பொழியும் இறைவா
அருள்மார ஊற்றும் தேவா
வரங்கள் அருளும் இறைவா
வல்லமை பொழிந்திடுமே
பெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும்
மரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும்
எரிந்து பிரகாரிக்கும் விளக்காய் திகழ
எங்களை உருவாக்கும்
எலியாவின் வல்லமை எங்கே
எலிசாவின் வல்லமை எங்கே
உம் சீடர் கிரியை எங்கே
இரட்டிப்பாய் வரம் தாருமே
உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு
துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு
உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு
பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும்
கவிழ்க்கவும் கட்டவும் பயன்படுத்தும்
எழுப்புதல் தாமதம் ஏன்
எங்கும் எதிர்ப்புகள் ஏன்
இறங்கியே கிரியை செய்யும்
வெற்றியின் கொடி ஏற்றும்
நான் தேவனின் மனுஷனென்றுல்
வானத்தின் அக்கினி இறக்கும்
இயேசுவே தெய்வம் என்று
தேசமும் ஏற்க செய்யும்