Alai Alaiyaai Paainthu Vaarum Deva kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை
அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை
என்னை நனைத்ததையா
தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது (2)
1. மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே – பெரு
2.அதிகாலை தேவசமூகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு
3.பலவீனத்தில் உம் கிருபை
பெலனாய் பாயுதையா
பலகோடி மனிதர்களின்
வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே இன்று